CAA NRC NPRக்கு எதிராக தொண்டியில் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் மனித சங்கிலி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தும் இன்று வரை போராட்டங்களில் இதுவரை போராடிய மக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டம் தொண்டியில் உள்ள பாவோடி மைதானத்தில் அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கொண்டிருக்கிறது
இந்நிலையில் தொண்டி வணிகர்கள் சார்பில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.